Advertisment

"என்றைக்கும் நடிகர் சங்கம் கேப்டனுக்கு கடமைப்பட்டுள்ளது" - நேரில் வாழ்த்திய கார்த்தி பேட்டி

kaarthi wishes vijaykanth on behalf of nadigar sangam

Advertisment

தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் தொண்டர்களை சந்தித்தார். மேலும் இந்த தினத்தை அக்கட்சியினர் ஆண்டுதோறும் வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடிவருகின்றனர். இதனிடையே விஜயகாந்திற்கு அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சங்கம் சார்பாக பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட சில நடிகர்கள் விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்துள்ளனர். அப்போது சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து விஜயகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, "நடிகர் சங்கம் சார்பாக கேப்டன் அவர்களுக்கு நேரில் சென்று வாழ்த்து சொல்ல ஆசைப்பட்டோம். என்றைக்கும் நடிகர் சங்கம் கேப்டனுக்கு கடமைப்பட்டுள்ளது. எங்களை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார். கையை பிடித்து கொண்டார். பிறகு இரண்டு நிமிடம் பேசினோம். ரொம்ப சந்தோஷமா இருந்திச்சு. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

actor karthi vijaykanth
இதையும் படியுங்கள்
Subscribe