என்.ஜி.கே படத்தை தொடர்ந்து காப்பான் படம் சூர்யா நடிப்பில் வெளியானது. இந்த படத்தில் சூர்யாவுடன் மோகன் லால், ஆர்யா, சயிஷா சைகல், சமுத்திரக்கனி, சிராஜ் ஜானி, பொம்பன் இரானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சூர்யாவை வைத்து இந்த படத்துடன் மூன்று படங்களை இயக்கியுள்ளார் கே.வி.ஆனந்த். அயன், மாற்றான் படத்தை தொடர்ந்து இதிலும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைப்பாளர். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/surya_30.jpg)
கடந்த ஆகஸ்ட் மாதமே படம் வெளியாவதாக இருந்தது ஆனால் பல்வேறு காரணங்களால் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதிதான் படம் வெளியானது. இந்த படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. பெரிய முதலீடு என்பதால் இந்தப் படம் தோவ்லியில் முடியும் என்றே பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில், ரூ.100 கோடி வசூலைத் தொட்டதை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருமே ஒன்றிணைந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இது தொடர்பாக ‘காப்பான்’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் இதயங்களில் நிறைவும், உதடுகளில் புன்னகையும் உங்களால் சாத்தியமாகியிருக்கிறது. ஒரு படத்தின் வெற்றி என்பது சகஜமானது. ஆனால் சாதனை வெற்றியென்பது அபூர்வமானது.
எங்கள் லைகா நிறுவனத்தின் தயாரிப்புகளில் நற்பெயரும், நல்ல வசூலும் தேடித் தந்தது காப்பான் திரைப்படத்தின் முதல் சாதனை. கேரளாவிலும், அயல் நாடுகளிலும் அதிரிபுதிரியான வசூல் கொண்டாட்ட சாதனை. மொத்த வசூலில் ரூ.100 கோடியைத் தொட்ட படங்களின் பட்டியலில் காப்பான் படமும் சேர்ந்தது முக்கிய சாதனை” என்று தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)