Advertisment

“தில்லானா மோகனாம்பாள் படத்துல வர்ற சிவாஜிகணேசன், பத்மினி மாதிரி இருக்கீங்க'' - சக நடிகரை கிண்டலடித்த காளி வெங்கட்!

daDA

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் இந்தியாவில் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் வீட்டிலேயே இருந்துகொண்டு சமூகவலைத்தளங்களில் திரையுலகினருடன் உரையாடுவது, பொதுமக்களுக்கு வீடியோக்கள், நேர்காணல் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வு என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் காமெடி நடிகர் பால சரவணன் தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ''பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்...'' எனப்பதிவிட்டார். இந்தப் பதிவைக் கவனித்த சக நகைச்சுவைநடிகர் காளி வெங்கட், ''அப்பிடியே தில்லானா மோகனாம்பாள் படத்துல வர்ற சிவாஜிகணேசன், பத்மினி மாதிரி இருக்கீங்க. வாழ்த்துக்கள்'' எனப் பதிவிட்டு, இருவரும் சிலாகித்து கொண்டனர்.

Advertisment

bala saravanan kaali venkat
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe