பிரபல எழுத்தாளரும், இயக்குநருமான லீனா மணிமேகலை புதிதாக எடுத்து வரும் 'காளி'ஆவணப்படத்தின்ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்த போஸ்டரில் இந்துக்களின் தெய்வமான காளி வேடம் அணிந்த பெண் வாயில் சிகரெட்டுடன், கையில் எல்ஜிபிடி கொடியைப் பிடித்தவாறு இருந்தது தொடர்பாக இந்து மதத்தை அவமதிப்பதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள்,இயக்குநர் மணிமேகலைக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். இதனிடையே டெல்லி மற்றும் உத்தரப் பிரதேச போலீசார் இயக்குநர் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும்உத்தரகாண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில்லீனா மணிமேகலைக்குஎதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் தன் மேல் பதியப்பட்ட வழக்கை எதிர்த்துலீனா மணிமேகலை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்லுக்கோ நோட்டீஸ் விடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர் கைதுக்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.இந்த மனுடெல்லி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில்லீனா மணிமேகலையின் கோரிக்கையைஏற்று அவரை கைது செய்ய இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர் மேல் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும்பதிலளிக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தகட்ட விசாரணையைபிப்ரவரி 17ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.