Skip to main content

காலா டீசர் ரிலீஸ் தேதி மாற்றம் 

Published on 01/03/2018 | Edited on 01/03/2018
kaala


சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கபாலிக்கு பிறகு இயக்குனர் பா ரஞ்சித்துடன் மீண்டும் கூட்டணி அமைத்து நடித்த படம் காலா. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஜத்குரு பூஜயஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யாவின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக காலா பட டீசர் ரிலீஸ் தேதியை மார்ச் 2ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் காலா டீசரை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களிடம் டீசர் தள்ளிவைப்புக்கு தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தனுஷ் பதிவிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கிளீன் இந்தியா - ப்யூர் மும்பை, கருப்பு பூசி ஹோலி கொண்டாட்டம்... காலா பேசும் அரசியல்!  

Published on 02/03/2018 | Edited on 02/03/2018

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பா. ரஞ்சித் இயக்கியுள்ள  'காலா' பட டீசர் மார்ச் 1 வெளியாகும் என்று சொல்லியிருந்தனர். ஆனால் காஞ்சி சங்கராச்சாரியாரின் மறைவுக்காக ஒரு நாள் அந்த டீசர் வெளியீட்டை தள்ளி வைப்பதாக  படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று காலா பட டீசரில் இருந்து ஒரு 9 நொடி வீடியோ லீக் ஆகியது. சமூக வலைத்தளங்களில் பரவ ஆரம்பித்தது, டீசர் மார்ச் 2 காலை 10 மணிக்கு வெளியாக இருப்பதாக தெரிவித்த படக்குழு திடீரென நேற்று இரவு 12 மணிக்கே வெளியிட்டது.

 

kala 1



காலா டீசரில் தொடக்கத்திலேயே, வாய்ஸ் ஓவரில் "போராட்டம் போராட்டம்" என்று மக்கள் குரல் ஒலிக்கிறது. பின்னர் வெள்ளை நிற உடையில் படத்தின் வில்லன் நானா படேக்கர், "காலா... என்ன பெயர்யா அது" என்று ஹிந்தியில் கேட்க சமுத்திரக்கனியின் குரலில்  அதன் அர்த்தம் கொடுக்கப்படுகிறது. ரஜினியோ முழுக்க முழுக்க கருப்பு உடையில் வருகிறார். 

 

kala 2



ஹீரோ கருப்பிலும் வில்லன் வெள்ளையிலும் என்று கான்ட்ராஸ்ட் காட்டப்படுகிறது. கருப்பு என்பது ஒரு தீய நிறம் போன்றும் வெள்ளை என்பது ஒரு நல்ல நிறம் போன்றும் உருவகப்படுத்தி வந்திருக்கும் இந்திய கலாச்சாரத்தில், காலா படம் மாற்று சிந்தனையை  கொடுக்கிறது. அதேபோன்று ஒரு காட்சியில் 'ஹாப்பி ஹோலி' என்ற கட்டவுட் வைக்கப்பட்டிருக்கிறது. ரஜினியும் நடிகர்களும் கருப்பு சாயத்தை மேலே அடித்துக் கொண்டு ஆடுகிறார்கள் ( ஹோலி பண்டிகை என்பது வண்ண நிறங்களால் கொண்டாடப்படுவது) , அந்த ஹாப்பி ஹோலி கட்டவுட் பக்கத்திலேயே வில்லன் நானா படேக்கர் உருவம் காவி நிற பின்புலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
 

kala 2



அதே போல, நான் இந்த நாட்டை "சுத்தமாகவும் புனிதமாகவும் மாற்ற வேண்டும்" என்று  வில்லன் நானா படேக்கர்  சொல்வது, தற்போது நிலவும் அரசியலை பேசியிருப்பது போல் உள்ளது. பின்னர், " என் சாலில் வந்து பார்" என்று ரஜினி சொல்வது (சால் என்றால் சேரி வாழ்விடத்தைக் குறிக்கும் சொல்), ரஜினி சமுத்திரக்கனி மற்றும் பலருடன் பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் இசுலாமிய அமைப்பு கொடிகள் இருப்பது. அடுத்த ஷாட்டில்  சலவை செய்யும் இடத்தில் ஒரு பெரிய கட்டவுட்டில்  'பியூர் மும்பை' என்ற வாசகத்துடன் காவி நிறைந்த பின்புலத்தில், வெள்ளை உடையுடன் நானா படேக்கரின் புகைப்படம் இருக்கிறது.
 

kala 4



ரஜினி என்றாலே பன்ச் டயலாக் இல்லாமல் இருக்குமா என்ன? "வேங்கய்யன் மவன் ஒத்தையில நிக்கேன் தில்லுருந்தா மொத்தமா வாங்கல" என்று நெல்லை மொழியில் பேசுகிறார். நெல்லை, தூத்துக்குடி தமிழர்கள் அதிகமாக மும்பை பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள், அவர்களின் கதை தான் இது. அடுத்து வருகிற ஷாட்களில் ரஜினி எதிரிகளை  அடித்துக்கொண்டே செல்கிறார்.

 

kala vangari



சந்தோஷ் நாராயணின் இசையும் யோகி.பி வாய்ஸும் ராப் பாட, சிவப்பு  நிறத்தில் 'காலா' என்று  டைட்டில் வருவதுடன் கடைசி பன்ச்சாக  ரஜினி "இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்தையும் பாத்தது இல்லைல... பார்ப்பீங்க" என்று ஸ்டைலாக நின்று சொல்ல பக்கத்தில் இருக்கும் சுவரில் 'வங்காரி மாதாய்' என்னும் கென்யா நாட்டு அரசியல் ஆர்வளர் புகைப்படம் வைக்கப்பட்டிருக்கிறது. இவர் 2004ஆம் ஆண்டு அமைதிக்காக நோபல் பரிசு வாங்கியவர்.  இது முழுக்க முழுக்க தற்கால அரசியலை பேசும் படமாக இருக்கும் என்று உறுதியாகிறது.