Published on 09/05/2018 | Edited on 11/05/2018

ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காலா’படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மே 9ஆம் தேதி (இன்று) மாலை நடக்க இருக்கின்ற நிலையில் படத்தின் பாடல்களை இன்று காலை முன் கூட்டியே படக்குழு வெளியிட்டுவிட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான பாடல் ஆல்பத்தில் மொத்தம் 9 பாடல்கள் வெளியாகியுள்ளன. வெளியான சில மணி நேரங்களிலேயே படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள 'காலா' படம் வருகிற ஜூன் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.