Skip to main content

காலா படம் வெளியாவதில் புதிய சிக்கல்

Published on 17/04/2018 | Edited on 18/04/2018
rajinikanth


பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'காலா' படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி என்று தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கிடையே டிஜிட்டல் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி கடந்த மார்ச் 1ஆம் தேதி ஆரம்பித்த சினிமா ஸ்ட்ரைக் தொடர்ந்து 45 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. மேலும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா துறையே முடங்கியுள்ளது. இந்நிலையில் இம்மாதம் வரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வரும் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த ‘காலா’ திரைப்படத்திற்கு தற்போது சிக்கல் எழுந்துள்ளது. இருந்தும் தயாரிப்பாளர்கள் நடத்தி வரும் ஸ்டிரைக்குக்கு விரைவில் தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பினும் கடந்த மாதம் வெளியாக காத்திருந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதால் காலா தள்ளிபோவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் படத்தை ஜூன் மாதம் கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை' - ரஜினிகாந்த்  

Published on 16/06/2018 | Edited on 16/06/2018
rajini


பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஜூன் 7ஆம் தேதி வெளியான ரஜினியின் 'காலா' படம் உலகமெங்கும் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. இதில் ரஜினி நில உரிமைக்காக போராடுபவராக நடித்துள்ளார். இதையடுத்து ரஜினி தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்காக இவர் டார்ஜிலிங் சென்று அங்கு படபிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பில் இருந்த ரஜினி அங்குள்ள செய்தியாளர்களிடம் காலா குறித்தும், இப்படத்தை குறித்தும் பேசியபோது... "காலா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுக்க பெரும் வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் அந்த மாநில அரசின் ஒத்துழைப்போடு நன்றாக ஓடுகிறது" என்றார். மேலும் தான் ஒரு மாதத்துக்கு தமிழ்நாடு திரும்ப வாய்ப்பு இல்லை என்றும் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடைபெறும் படப்பிடிப்பை முடித்த பிறகே சென்னை திரும்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


 

Next Story

'காலா' - விற்கு அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது நடவடிக்கை 

Published on 13/06/2018 | Edited on 14/06/2018
kaala


சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் கடந்த 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியான 'காலா' படம் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இதற்கிடையே 'காலா' படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதையடுத்து தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்காக தீவிரமாக கண்காணிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காலா படத்துக்கு கூடுதல் கட்டணம், பார்க்கிங் வசூலிக்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் சட்ட அமலாக்க அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள் என்று நீதிபதிகள் எச்சரித்து உள்ளனர். இதனால் அதிக கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.