காலா படத்தின் இசை மே 9ம் தேதி வெளியாகும் என காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisment

kaalaa

கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. மும்பையை பின்னனியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தை தனுஷின் சொந்த நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம்தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நானா படேகர் வில்லனாக நடித்து உள்ளார். மேலும் சமுத்திரகனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹீமா குரேஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், ரமேஷ் திலக், அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வரும் ஜூன்7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வரும் மே 9ம் தேதி காலா படத்தின் இசை வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.