kaala rajini

Advertisment

ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ள 'காலா' படத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி வருகிறது. ஏற்கனவே காவிரி விவகாரத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுத்ததற்காக 'காலா' படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக வர்ததக சபை தடை விதித்தது. இதனை தொடர்ந்து படத்தை எப்படியாவது வெளியிட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், 'படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதை கர்நாடக மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன்' என்று நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூறியுள்ளார். இந்நிலையில் 'காலா' படத்தை நார்வே மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிலும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படி ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் அடுத்தடுத்து 'காலா' படத்துக்கு தடை விதிக்கப்படுவதால் படத்தின் வசூலுக்கு இது பின்னடைவாக அமையும் என்று பட வினியோகஸ்தர்கள் தரப்பில் பரவலாக பேசப்படுகிறது. மேலும் இது வெளிநாடு வாழ் ரஜினி ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.