பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா' திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் ட்ரைலர் மற்றும் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான 'செம வெயிட்' சிங்கிள் ட்ராக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீடு விழா வரும் 9ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.எ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

sema weightu

Advertisment

மேலும் 'வுண்டர்பார் ஸ்டுடியோஸ்'நிறுவனமும், அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ நிறுவனமும் இணைந்துயூடியூப், ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்களில் லைவ்வாக இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ரஜினி அரசியல் அறிவிப்பிற்கு பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கலந்துகொள்வதற்கும், அரசியல் குறித்து அடுத்தகட்ட ஆலோசனை நடத்தவும் இன்று ரஜினி அமெரிக்காவிலிருந்து இன்று காலை சென்னை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.