ndh

Advertisment

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கியகதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்திலும் நடித்துள்ள படம் ‘க/பெ ரணசிங்கம்’. இந்தபடத்தை பெ.விருமாண்டி இயக்கியுள்ளார்.

கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தபடத்தில் சமுத்திரக்கனி, 'பூ' ராம், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ரங்கராஜ் பாண்டே, இந்தப் படத்திலும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ‘க/பெ ரணசிங்கம்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தற்போது வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.