சில திரைப்படங்கள் தொடர்ந்து நேர்மறை அதிர்வுகளை பரப்பி பொதுமக்கள் கவனத்தை ஈர்க்கும். அதற்கு சரியான உதாரணமாக பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கும் படம் அமைந்துள்ளது. இப்படத்திற்கு தற்போது 'K13' என்று தலைப்பு வைத்த பர்ஸ்ட் லூக்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி இயக்குனர் பரத் கூறும்போது...."K13' ஒரு வீட்டின் முகவரி, அது இந்த படத்தின் கதையுடன் மிகவும் நெருங்கிய தொடர்பை உடையது. சில வரம்புகளுக்கு உட்பட்டு, படத்தை பற்றி நாங்கள் இப்போது எதுவும் சொல்ல முடியாது, பார்வையாளர்களே படத்தை பார்த்து அனுபவிக்க வேண்டும் என விரும்புகிறோம். 'K13' ஒரு இருக்கையின் விளிம்பில் உட்கார்ந்து பார்க்கும் வகையிலான ஒரு திரில்லர் படமாக இருக்கும்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
நாயகன், நாயகி ஆகிய இரண்டு கதாபாத்திரங்களும் மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அவர்களை இதில் நடிக்க தேர்ந்தெடுத்ததற்கான காரணம், அவர்கள் இருவருமே சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். மேலும் தங்கள் படம் எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், உடனடியாக அடுத்தடுத்த படங்களில் நடிக்க அவசரம் காட்டாதவர்கள். நல்ல கதைக்காக எவ்வளவு காலமும் காத்திருப்பவர்கள்" என்றார். 'K13' படத்தை SP சினிமாஸ் சார்பில் SP ஷங்கர் மற்றும் சாந்தா பிரியா தயாரிக்கிறார்கள். கிஷோர் சம்பத் மற்றும் டெஸாஸ்ரீ டி இணை தயாரிப்பு. தர்புகா சிவா இசையமைக்க, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். சுதேஷ் வடிவமைத்திருக்கும் அதிரடி சண்டைக்காட்சிகள் அமைகின்றார்.