k rajan about atlee

ஆர். கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காசேதான் கடவுளடா’. இப்படத்தில் ஊர்வசி, கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மசாலா பிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 1972 ஆம் ஆண்டு வெளியான ‘காசேதான் கடவுளடா’ படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.

Advertisment

இப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படம் வருகிற 24 ஆம் தேதி (24.03.2023) வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்து பேசியது படக்குழு. அப்போது படக்குழுவுடன் தயாரிப்பாளரும் வினியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பல விஷயங்களை பேசிய அவர் அட்லீ இயக்கிய பிகில் படத்தை கடுமையாகச் சாடினார்.

Advertisment

இது குறித்து அவர் பேசுகையில், "இந்தியில் ஷாருக்கான் நடிப்பில் சக் தே இந்தியா என்ற தலைப்பில் ஒரு படம் வெளியானது. படத்தில் தேவையற்ற காட்சிகள் எதுவும் இல்லை. அதே படம் தான் தமிழில் வெளியான பிகில். அதில் ஹாக்கிஇதில் கால்பந்து. தயாரிப்பாளரை கால் பந்தாக நினைச்சு எட்டி எட்டி உதைச்சிட்டாங்க. தயாரிப்பு நிறுவனம் பெரிய கம்பெனி என்பதால் அதை சமாளிச்சுட்டாங்க. வெளிப்புற யூனிட்டில் ஜூனியர் ஆர்டிஸ்டுகளிடம் 10% கமிஷன் வாங்குறாரு அந்த டைரக்டர். தயாரிப்பாளரிடம் கோடிக் கணக்கில் சம்பளம். அது மட்டுமில்லாமல் 10% கமிஷன். இது நியாயமா. அந்த பணம் நிக்காது. அதனால் அவருடைய இரண்டு படமும் ஃப்ளாப். வீட்டை வித்தார். அவர்கள் எல்லாம் துரோகிகள்" என்றார்.