
பிரபல நடிகர் பாக்கியராஜ் நடித்த ‘முந்தானை முடிச்சு’ படத்தை இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ரீமேக் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'முந்தானை முடிச்சு' பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம். ஏவிஎம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் ஊர்வசி, தீபா. கே.கே.சொளந்தர், சத்யா உள்ளிட்ட பலர் பாக்யராஜுடன் நடித்தனர்.
மேலும், 37 ஆண்டுகளுக்குப் பிறகு ‘முந்தானை முடிச்சு’ படம் ரீமேக் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை பாக்யராஜ் எழுதுகிறார். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற முந்தானை முடிச்சு படத்தை தற்போது ஜே.எஸ்.பி. ஸ்டுடியோஸ் நிறுவனம் ரீமேக் செய்யவுள்ளது. இந்தப் படத்தில் பாக்கியராஜ் கதாபாத்திரத்தில் சசிகுமாரும், ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்கவுள்ளனர். எஸ்.ஆர். பிரபாகரன், சசிகுமார் நடித்த ‘சுந்தர பாண்டியன்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் கூட்டணியில் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)