Skip to main content

"இது மூலம் நிறைய புதுமுக கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்" - இயக்குநர் கே.பாக்யராஜ் நம்பிக்கை 

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

 K Bhagyaraj

 

அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், ஆஹா ஓடிடி தளத்தை தொடங்கி நடத்தி வருகிறார். தெலுங்கில் பிரபல ஓடிடி தளமாக அறியப்பட்ட ஆஹா தளம், தற்போது தமிழிலும் எண்ட்ரி கொடுத்துள்ளது. சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ஆஹா தளத்தின் அறிமுக விழாவில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.  

 

விழாவில் இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், "முதலில் நடிகர்கள் பெரிய தயாரிப்பாளர்களை சந்தித்து வாய்ப்பு கேட்பார்கள். பின், நடிகர்கள் பெரிய ஆட்கள் ஆனவுடன் தயாரிப்பாளர்கள் அவர்களைச் சந்தித்து கால்ஷீட் கேட்பார்கள். அதேபோல ஆரம்பகட்ட தயாரிப்பாளர்கள் உடனடியாக பணத்தை செட்டில் செய்யக்கூடிய விநியோகஸ்தர்களை தேடிப்போவார்கள். பின், அந்தத் தயாரிப்பாளர் பெரிய தயாரிப்பாளர் ஆனவுடன் விநியோகஸ்தர்கள் இவரைத் தேடி வருவார்கள். அதேபோல ஆரம்பகட்ட விநியோகஸ்தர்கள் நல்ல திரையரங்க உரிமையாளரைத் தேடிச் செல்வார்கள். அவர் முன்னணி விநியோகஸ்தர் ஆனவுடன் திரையரங்க உரிமையாளர்கள் அவரைத் தேடி வருவார்கள். இப்படித்தான் சுழற்சி முறையில் சினிமாவில் நடக்கும். 

 

முதலில் ஓடிடி நிறுவனங்கள் தமிழ் தயாரிப்பாளர்களை தேடிக்கொண்டு இருந்தார்கள். இப்போது தயாரிப்பாளர்கள் ஓடிடி நிறுவனங்களை தேட ஆரம்பித்துவிட்டார்கள். நிறைய புதுமுக திறமையாளர்கள் அறிமுகமாவதற்கான வாய்ப்பு ஓடிடி மூலம் கிடைக்கிறது. அந்த வகையில், அல்லு அரவிந்த் சாரின் இந்த ஆஹா ஓடிடி மூலமும் நிறைய புதுமுக கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆஹா குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

 

 

சார்ந்த செய்திகள்