Skip to main content

''உ.பி. மாணவரின் ஐடியாவை செயல்படுத்த பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன்'' - கே.பாக்யராஜ்

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

சீனாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ், தற்போது 200 நாடுகளுக்கும் மேல் பரவி, உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் இந்திய பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடைய வாய்ப்புள்ள நிலையில் உ.பி. மாநிலத்தை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பிரச்சனை தீர அனைத்து மத டிரஸ்ட்கள் வைத்திருக்கும் பணத்தில் 80 சதவீதத்தை அரசு பயன்படுத்திக் கொண்டால், இந்திய பொருளாதாரம் எளிதில் முன்னேற்றம் அடைந்து விடும் என்றும் யோசனை தெரிவித்திருந்தார். 

 

gdg

 

இந்நிலையில், பிரதமருக்கு உ.பி. மாணவர் எழுதிய கடிதத்துக்கு இயக்குனர் கே.பாக்யராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது... ''இந்த மாணவரின் ஐடியாவை செயல்படுத்துங்கள் என பிரதமர் மோடிக்கு தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் இருந்து நான் கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளேன். நீங்களும் இதேபோல் இந்த விஷயத்தை பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும். மனிதனுக்கு ஏற்றமோ, தாழ்வோ வரும்போது இதுவும் கடந்து போகும் என்பது ஞாபகத்திற்கு வரவேண்டும். இந்த இக்கட்டான கரோனா பிரச்சனையும் அதுபோல் கடந்து போகும். அனைவரும் தனித்திருக்க வேண்டும். அரசு கூறிய ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும். உதவி செய்வதிலேயே பெரிய உதவி பிரதிபலன் பாராது செய்யும் உதவிதான் என்பது போல் நமக்காக காவல்துறையினர், டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவ அதிகாரிகள் உள்பட பலர் சேவை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்'' என்று கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாக்யராஜ் கொடுத்த அல்வா; முந்தானை முடிச்சு முருங்கைக்காய் ரகசியம்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

Munthanai Mudichu movie scene secret

 

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் - அல் முராட் & சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை ரத்தன் லிங்கா எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர். 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலை பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். 'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்தும், நடிகைக்கு அல்வா கொடுத்தது பற்றியும் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதில், “இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால், எந்த ஒரு விசேச காரணமும் இல்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கைக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்கு போதும். இரண்டுக்கு மேல் வேண்டாம், இது போதும் என்பார் பாட்டி.

 

எப்போதும் வேண்டாம் என்பதில்தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்த சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதை விளையாட்டாகத்தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால், இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது .

 

லாக் படத்தின் கதாநாயகி மதுஸ்ரீ எடைக்குறைப்பு பற்றி பேசினார் .இப்படி சிரமப்பட்டு வெற்றி பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. நான் சின்னவீடு படத்தில் கல்பனாவுக்கு தினசரி அல்வா கொடுத்தேன். ஏனென்றால், அவர் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காக. சிரமப்பட்டு உழைத்தால்தான் அதன் மதிப்பு நமக்கு தெரியும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள்.” என்று கூறினார்.

 

 

Next Story

இசை வெளியீட்டு விழாவில் பாக்யராஜ் சொன்ன குட்டிக்கதை

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

 A short story told by Bhagyaraj at the audio launch event

 

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் - அல் முராட் & சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'லாக்'. இப்படத்தை ரத்தன் லிங்கா எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர். 'அட்டு' என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலை பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். 'லாக்' படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது வாழ்வில் பிரச்சனைகள் வருவது பற்றி ஒரு குட்டிக் கதையும் சொன்னார். இயக்குநர் கே.பாக்யராஜ் பேசியதில், “படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும்போது பல்வேறு சிரமங்கள், இடைஞ்சல்களைச் சந்தித்துத்தான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்துகொண்டு தான் இருக்கும். அதையும் தாண்டித்தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும். எனக்கு இப்போது ஒரு கதை ஞாபகம் வருகிறது. 

 

மூன்று திருடர்கள் தினமும் விநாயகரை வேண்டிவிட்டு திருடப் போவார்கள். ஒன்றும் கிடைக்காவிட்டால் வந்து சண்டை போடுவார்கள். அப்படிப் பலநாள் எதுவும் கிடைக்கவில்லை. அன்று வேண்டும்போது, இன்று மட்டும் எதுவும் கிடைக்காவிட்டால் எங்களுக்கு கெட்ட கோபம் வரும் என்று எச்சரித்துவிட்டு திருடச் சென்றார்கள். அன்றும் ஒன்றுமே கிடைக்காதுபோகவே, ஒவ்வொருவராக விநாயகர் கோவிலுக்குள் கல் வீசினார்கள். ஆனால், மூன்றாவது திருடன் மட்டும் கொஞ்சம் தயங்கினான். விநாயகர் தண்டித்துவிட்டால் என்ன செய்வது? என்று பயந்து அந்தக் கல்லைத் தூக்கிக் கோயிலுக்கு வெளியே உயரமாக இருந்த மரத்தின் மீது வீசினான்.

 

அதே நேரத்தில் கண் வலித்தது. என்ன என்று பார்த்தால் எதிரே விநாயகர் நின்றார். தலையில் ரத்தத்தோடு. நான் எதுவுமே செய்யவில்லையே! நான் கல்லை கோயிலைத் தாண்டித்தானே வீசினேன்! என்றான். எனக்கு ஏன் இப்படி ஒரு தண்டனை கொடுத்தாய் விநாயகா? என்றான். அதற்கு விநாயகர், நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றுதான் நான் தான் மரத்தின் மீது ஏறி ஒளிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன் என்றார். அதுபோல இடையூறுகள் எப்படியென்றாலும் வாழ்வில் வந்தே தீரும்.” என்று கூறினார்.