jyotika joins Ajay Devgn Vikas Bahl movie

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன்கடைசியாக கைதி படத்தின் இந்தி ரீமேக்கான 'போலா' படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்போது 'மைதான்', 'சிங்கம் அகெய்ன்' உள்ளிட்ட சில படங்களில் நடிக்கிறார். இதில் மைதான் படத்தின்போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெறுகிறது. வருகிற ஜூன் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'சிங்கம் அகெய்ன்' படத்தின்ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இதையடுத்து அஜய் தேவ்கன் அடுத்ததாக விகாஸ் பால் இயக்கத்தில் பனோரமா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ளார். சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகிறது. இதில் மாதவன் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படம் தற்போது ப்ரீ புரொடக்‌ஷன் நிலையில் உள்ளது மற்றும் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதன் படப்பிடிப்பு மும்பை, முசோரி மற்றும் லண்டனில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தில் ஜோதிகா தற்போது இணைந்துள்ளார். இப்படத்தின் மூலம் முதல் முறையாக அஜய் தேவ்கன் படத்தில் நடிக்கவுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியில் ராஜ்குமார் ராவ் நடிக்கும் 'ஸ்ரீ' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது அஜய் தேவ்கன் படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு முன்னதாக இந்தியில் ஜோதிகா நடிப்பில் 'டோலி சஜா கே ரக்கீனா' மற்றும் 'லிட்டில் ஜான்' ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.