/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/240821993_238094841552057_1862473891648964947_n.jpg)
36 வயதினிலே படம் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நடிகை ஜோதிகா அதன் பின்னர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த மகளிர் மட்டும், ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், காற்றின் மொழி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன. இதையடுத்து தற்போது இவர் சசிகுமாருடன் ‘உடன்பிறப்பே’ படத்தில் நடித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/240981023_892591848319634_3863085721316710431_n.jpg)
இப்படம் வருகிற அக்டோபர் மாதம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகயுள்ள நிலையில் இதுவரை எந்த சமூக வலைதளங்களிலும் கணக்கு தொடங்காமலிருந்த நடிகை ஜோதிகா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சமூக ஊடகத்தில் முதல் முறையாக இணைத்துள்ளேன்! ஊரடங்கில் கழித்த நாட்களில் இருந்து நிறைய நல்ல விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்" என கூறி கையில் தேசியக்கொடியை ஏந்திய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். நடிகை ஜோதிகாவின் சமூகவலைதள எண்ட்ரிக்கு கணவர் சூர்யா மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)