Advertisment

“இதுதான் சரியான நேரம்”- ஜோதிகா பட சர்ச்சை குறித்து தயாரிப்பாளர்!

ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருந்த படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்தப் படத்தை சூர்யாவின் '2டி' நிறுவனம் தயாரித்திருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் எந்தப் புது படங்களும் மே மாதம் இறுதி வரையில் வெளியாகாது என்பது தெரிய வருகிறது. இதனால் பொன்மகள் வந்தாள் படத்தை டிஜிட்டலில் நேரடி ரிலீஸ் செய்யப் படக்குழு திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.

Advertisment

jothika

இதனைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர் சங்கச் செயலாளர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர்கள் இப்படி நேரடியாக ரிலீஸ் செய்யக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஸ் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அதில், “பொன்மகள் வந்தாள்படத்தை அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியிட விற்ற காரணத்திற்காக, திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அவர்களுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அது அவர்களுடைய நிலைப்பாடு. இங்குப் பணம் முதலீடு செய்த ஒரு தயாரிப்பாளராக, முதலில் தயாரிப்பாளருக்குத் தொழில் சுதந்திரம் தேவை. அந்தப் பொருளை எங்கு விற்கலாம், எங்கு வெளியிடலாம் என்பது தயாரிப்பாளரின் இறுதி முடிவு.

இன்றைய காலச்சூழலில் முதல் போட்ட பணத்தை அசல் எடுத்தாலே போதும் என்ற சூழல்தான் இருக்கிறது. அதை யாரும் மறுக்க முடியாது. 100- க்கு 99 சதவீதம் தயாரிப்பாளர்களின் நிலை அதுதான். இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரு வியாபாரம் டிஜிட்டல் ப்ளாட்பார்மிலிருந்து வரும்போது, அதை ஒரு தயாரிப்பாளராகப் பயன்படுத்திக் கொள்வதே வியாபாரத் திறமை. அதற்கு முட்டுக்கட்டை போடுவதையோ, குறை சொல்வதையோ நாம் புறந்தள்ளியிருக்க வேண்டும்.

Advertisment

http://onelink.to/nknapp

முதலில் ஒரு தயாரிப்பாளர் வெற்றிகரமாக வியாபாரம் செய்கிறார் என்றால், அவரிடமிருந்து விஷயங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவருக்குக் கரம் கொடுத்து, தோள் கொடுத்து வாழ்த்தலாம். நாமே ஒரு சக தயாரிப்பாளரைக் குறை சொல்வது நாகரிகமாகத் தெரியவில்லை. இதே பிரச்சினை தயாரிப்பாளர்களாகிய நமது ஒவ்வொருவருக்கும் வரலாம். இதனைச் சிந்தித்து நமது தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஜெயிக்க வேண்டும். இதில் காழ்ப்புணர்ச்சி கூடாது. நம்மைத் தொழில் செய்ய விடமாட்டார்கள் என்று ஒதுங்கினீர்கள் என்றால், இதைவிட ஒரு தவறான செயல் எதுவுமே இருக்க முடியாது.

ஒற்றுமையாக இருந்து வெற்றி காண்பதே வியாபர யுக்தி, வியாபாரத் திறன். அதற்குதான் தயாரிப்பாளர் சங்கம் பக்கபலமாக இருக்க வேண்டும். அதைவிடுத்து நாமே நம் ஆட்களைக் குறை சொல்லக் கூடாது. ஒற்றுமையாக இருந்து இந்தப் பிரச்சினையைக் கையாள்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

jothika
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe