35 நாட்களில் படப்பிடிப்பை முடித்த படக்குழு... சூர்யா வாழ்த்து

காற்றின் மொழி படத்தைத் தொடர்ந்து ஜோதிகா கல்யாண் இயக்கத்தில் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

surya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சூர்யாவுடனான் திருமணத்திற்கு பிறகு ஜோதிகா பல வருடங்கள் கழித்து 36 வயதினிலே என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது பாதியை தொடங்கினார். அதனை அடுத்து வரிசையாக பெண்கள் மையமாக கொண்ட கதை களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜோதிகா.

ஜோதிகா நடிக்கும் இந்த படத்தை குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண்தான் இயக்குகிறார்.

ரேவதி, யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பலர் ஜோதிகாவுடன் நடித்துள்ளனர். ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்க, விஜய் படத்தை எடிட் செய்கிறார்.

கடந்த ஃபிப்ரவரி 10ஆம் தேதி பூஜையுடன் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதன் பின்னர் சரியான திட்டமிடுதலால் 35 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இறுதிநாள் படப்பிடிப்பில் தயாரிப்பாளர் சூர்யா கலந்து கொண்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அந்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. சூர்யாவின் 2டி நிறுவனம்தான் இந்த படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Surya
இதையும் படியுங்கள்
Subscribe