Advertisment

சூர்யா ஜோதிகாவுடன் இணைந்த சசிகுமார் அன் டீம்!

குடும்பங்கள் கொண்டாடும் தரமான வெற்றிப்படங்களை தந்து வரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த பட பூஜை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனில் இன்று காலை நடத்தப்பட்டது.

Advertisment

 z

இவ்விழாவில் நடிகர் சிவகுமார், 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனரும் தயாரிப்பாளருமான சூர்யா, கார்த்தி, சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, கலையரசன், இமான், 2டி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், இயக்குனர்கள் பாண்டிராஜ், கல்யாண், பிரெட்ரிக், சி கௌதமராஜ், டீ. ஜே ஞானவேல், குகன் சென்னியப்பன், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு, ஒளிப்பதிவாளர்கள் ரவி வர்மா ராம்ஜி, கதிர், விநியோகஸ்தர் பி.சக்திவேலன் மற்றும் பின்னணி பாடகர் கிரிஷ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment

கிராமியப் பின்னணியில் உறவுகளின் வலிமையைச் உரக்கச்சொல்லும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நடிகர்கள் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். மேலும் சூரி, கலையரசன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை இயக்குநர் இரா.சரவணன் இயக்கவுள்ளார். டி இமான் இசையமைக்கும் இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டப் பகுதிகளில் படமாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

2d Surya samuthirakani Sasikumar
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe