style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஜோதிகா நடிப்பில் வெளியான '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்தாக நடித்த 'காற்றின் மொழி' படம் வரும் 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் அவர் அடுத்ததாக இரண்டு புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் ஒரு படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கி, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இப்படத்தின் பூஜை இன்று நடத்தப்பட்டது. மேலும் இந்த வார இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது. நாயகியாக ஜோதிகா நடிக்கும் இப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.