“உனது தேர்வுகள் நம்பிக்கையை பிரதிபலிக்கட்டும்” - மகள் குறித்து ஜோதிகா பெருமிதம்

jyothika feels proud regards his daughter diya finish his school graduation

சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் தியா பள்ளிப்படிப்பைத் தொடர்ந்து வந்தார். கடந்த ஆண்டு ஒரு ஆவணக்குறும்படம் எடுத்திருந்தார். அப்படம் பாலிவுட் துறையில் காஃபர்-ஆக(Gaffer)இருக்கும் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இதனை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தியா பள்ளி படிப்பை முடித்துள்ளதாக ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் பட்டம் வாங்குவதை வீடியோவாக பகிர்ந்து, அதில் தியா சிறுவயதில் இருந்து இப்போது வரை பள்ளிக்கு போகும் சில புகைப்படங்களையும் பின்பு அவரது தாத்தா பாட்டியுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் இணைத்துள்ளார். பட்டமளிப்பு விழாவில் சூர்யா ஜோதிகா இருவரும் கலந்து கொண்டு மகளை வாழ்த்தினர்.

ஜோதிகா பகிர்ந்துள்ள வீடியோவின் கேப்ஷனில், “இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே உணர்வு... பெருமை. உனது தேர்வுகள் உன்னில் இருக்கும் நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கட்டும், மாறாக உனது அச்சங்களை அல்ல. ஆல் தி வெரி பெஸ்ட் தியா. உனக்கு அம்மா அப்பாவின் ஆசிகள் என்றென்றும் இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

actor suriya
இதையும் படியுங்கள்
Subscribe