maniyarfamily

Advertisment

jyothika

சென்ற வருடம் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற மலையாள பாடலான 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு தமிழகமே நடனமாடி தலையசைத்தது. இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான இப்பாடலை ஜோதிகாவின் "காற்றின் மொழி" திரைப்படம் மூலம் மீண்டும் கேட்டு ரசிக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா 'காற்றின் மொழி' படத்திற்காக இப்பாடலுக்கு நடனமாடினர். ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர். ஏற்கனவே நாயகி ஜோதிகாவுக்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது.

இதோடு சேர்த்து ஜிமிக்கி கம்மலும் வரும் போது அதை கேரள ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடமேற்று நடித்துள்ளார். A.H. காஷிஃப் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மாபெரும் புகழ் பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' மலையாள பாடலின் உரிமையை சத்யம் ஆடியோஸ் நிறுவனத்திடமிருந்து பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தனன்ஞ்ஜெயன் முறைப்படி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என்றும், படத்தை அக்டோபர் 18ல் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்.