ரேடியோ ஜாக்கியாகிறார் ஜோதிகா 

jv

நாச்சியார் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ஜோதிகா தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜோதிகா அடுத்ததாக வித்யா பாலன் நடித்த 'தும்ஹரி சுளு' என்ற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார். வித்தியாபாலன் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து, ராதா மோகன் இந்தப் படத்தை இயக்குகிறார். மொழி படத்திற்கு பின்னர் இயக்குநர் ராதாமோகன் மற்றும் ஜோதிகா மீண்டும் இணைகின்றனர்.இந்த படத்தில் திருமணமான, நடுத்தர வயதுப் பெண்ணாக ஜோதிகா நடிக்கிறார். அவரின் குறிக்கோளும், ரேடியோ ஜாக்கி ஆகி சாதிப்பதும் தான் படத்தின் கதையாகும். இப்படத்தை பொஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jyothika vidyabalan surya
இதையும் படியுங்கள்
Subscribe