செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களுக்கு பின்னர் நடிகை ஜோதிகா புதுமுக இயக்குனர் இயக்கத்தில் ராட்சசி என்றொரு படத்தில் நடித்திருக்கிறார்.

Advertisment

ratchasi

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ஜோதிகா நடித்துள்ள இப்படத்தை இயக்குவது புதுமுக இயக்குனர் கௌதம்ராஜ். தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. 'ராட்சசி' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர், இன்று மே 31 மாலை வெளியிடப்படவுள்ளது.

Advertisment

பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.

கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கும் என்பதால் இப்படத்தின் வெளியீட்டை ஜூன் மாத இறுதியில் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தை முடித்துவிட்டு, 'ஜாக்பாட்' படத்தில் நடித்து வந்தார் ஜோதிகா. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்த்தியுடன் இணைந்து ஜீது ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.