Advertisment

விஷ்ணு விஷாலுடன் உள்ள காதல் குறித்து மனம் திறந்த ஜுவாலா கட்டா 

உலகமே கொரோனா வைரஸால் ஸ்தம்பித்து போய் உள்ள நிலையில் திரை உலகினரும் படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் நாட்கணக்கில் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும், விஷ்ணு விஷால் காதலியுமான ஜூவாலா கட்டா டிவிட்டரில் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களைச் சமீபத்தில் பதிவிட்டு...'மிஸ்ஸிங் மை பூ' எனக் குறிப்பிட்டு விஷ்ணுவிஷாலை மிஸ் செய்வதாகப் பதிவிட்டிருந்தார். பின்னர் இதற்கு பதிலளித்த நடிகர் விஷ்ணு விஷால்...'அது பரவாயில்லை.

Advertisment

cbfd

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஆனால் தற்போது சமூக இடைவெளி மிகவும் முக்கியம். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்து கொள்வோம்' எனப் பதிவிட்டு காதலிக்கு ஆறுதல் சொன்னது மட்டுமின்றி விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். விஷ்ணுவிஷால் 2018ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரைக் கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டாவும் விஷ்ணு விஷாலும் காதலித்து வரும் நிலையில் ஜுவாலா கட்டா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஷ்ணு விஷாலுடன் உள்ள உறவு குறித்து பேசியுள்ளார்.அதில்...''நாங்கள் டேட்டிங் செய்து வருவது உண்மைதான். நான் ஏற்கனவே சொன்னது போல் இதில் மறைக்க வேண்டியது ஏதுமில்லை. நாங்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறோம்.தேதி முடிவானதும் இது குறித்து அறிவிப்போம். இதுபற்றி மேலும் தெரிவிக்க ஏதும் இல்லை'' என்றார்.

Jwala gutta vishnu vishal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe