Skip to main content

ஜஸ்டீஸ் லீக் படத்தின் 'இயக்குனர் வெர்ஸன்' ரிலீஸ், உறுதி!

Published on 21/05/2020 | Edited on 21/05/2020

 

justice league


கடந்த 2017ஆம் ஆண்டு ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் வெளியான டிசி படம் 'ஜஸ்டீஸ் லீக்'. இந்தப் படத்தில் டிசியின் முக்கிய சூப்பர் ஹீரோக்களான சூப்பர் மேன், பேட்மேன், வொண்டர் வுமன், அக்குவாமேன், ப்ளாஷ், உள்ளிட்ட அனைவரும் இணைந்து நடித்திருப்பார்கள். இந்தப் படம் தியேட்டர் ரிலீஸுக்காக கட் செய்தபோது சுமார் 2 மணி நேரத்திற்கு மட்டுமே கட் செய்து வெளியிட்டனர்.
 


ஹாலிவுட் சினிமாவில் படத்தின் எடிட்டிங்கில் தயாரிப்பாளரின் பேச்சுக்குதான் அதிக உரிமை உண்டு, அதனைத் தொடர்ந்துதான் இயக்குனரின் பேச்சுக்கு படத்தொகுப்பில் உரிமை உண்டு. அதனால் தியேட்டரில் வெளியாகும் கட்டிற்கு முன்பாக டைரக்டர் ஒரு கட் செய்து வைத்திருப்பார். அதைத்தான் தயாரிப்புக்குழு தியேட்டர் ஆடியன்ஸிற்கு ஏற்றார்போல கட் செய்வார்கள். 

தியேட்டரில் படம் வெளியானபின்பு, சில தயாரிப்பு நிறுவனம் டைரக்டர்ஸ் கட் வெர்ஸனை சி.டி.யாக ரிலீஸ் செய்வது வழக்கமாகவே உள்ளது. அந்த வகையில் ஜாக் ஸ்னைடர் எடுத்த ஜஸ்டீஸ் லீக் படத்தின் இயக்குனர் கட் வெளியிட வேண்டும், அது தியேட்டர் வெர்ஸனைவிட அருமையாகவும் டிசி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவும் இருக்கும் என்று கடந்த ஒரு வருடமாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
 

 


இந்நிலையில் டிசி தயாரிப்பு நிறுவனம் தற்போது வேறு ஒரு நிறுவனத்தின் கீழ் கைமாறியுள்ளது. அவர்கள் ஹெச்.பி.ஓ மேக்ஸ் என்ற புது ஓ.டி.டி. பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்கின்றனர். அதில், ஹெச்.பி.ஓ. டி.வி. தொடர்கள் மற்றும் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்புப் படங்கள், அதில் டிசி படங்களும் அடங்கும். இந்த ஓ.டி.டி.யின் புரொமோஷனுக்காக அடுத்த வருடம் ஜாக் ஸ்னைடர்ஸ் வெர்ஸன் ஜஸ்டீஸ் லீக் ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நான்கு மணிநேரப் படமாக வெளியிடப்படும் அல்லது ஐந்து பாகங்கள் கொண்ட மினி சீரிஸாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டிசி நிறுவனத்தின் ஆடியோ நாடகம்; குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

shruti haasan is in the part of dc in the sandman act 3

 

பிரபல ஹாலிவுட் நிறுவனமான டிசி நிறுவனம், நாவல்களை நாடகங்களாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'தி சான்ட்மேன்: ஆக்ட்' உலக அளவில் பலரது கவனத்தை பெற்றது. இப்போது இந்த நாடகத்தின் மூன்றாம் பாகம் 'தி சான்ட்மேன்: ஆக்ட் III ' உருவாகிறது. இந்த தொடரில் ஜேம்ஸ் மெக்அவோய், கேட் இன்னிங்ஸ்,  மிரியம் மார்க்கோய்ல்ஸ் மற்றும் ஜஸ்டின் விவியன் பாண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

இந்நிலையில் பிரபல டிசி நிறுவனம் தயாரிக்கும் 'தி சான்ட்மேன்: ஆக்ட் III ' ஆடியோ நாடகத்தில் ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், " இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

 

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்திலும், நடிகர் பாலமுரளி கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் 'என் பி கே 107' எனும் படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'சிரு 154' எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

'டிசி'-யின் அடுத்த படைப்பு ; ட்ரெண்டிங்கில் 'ப்ளாக் ஆடம்' ட்ரைலர்

Published on 09/06/2022 | Edited on 09/06/2022

 

The next creation of ‘DC’; 'Black Adam' trailer on Trending

 

ஹாலிவுட்டில் வரும் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதுமே உலகம் முழுவதும் மவுசு அதிகம். குறிப்பாக 'டிசி' மற்றும் 'மார்வெல் ஸ்டுடியோஸ்' நிறுவனங்களின் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் 'டிசி' நிறுவனத்தின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் படம் 'ப்ளாக் ஆடம்'. இந்த படத்தில் 'ப்ளாக் ஆடம்' கதாபாத்திரத்தில் டுவைன் ஜான்சன் நடித்துள்ளார். பியர்ஸ் ப்ரோஸ்னன், ஆல்டிஸ் ஹாட்ஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பியூ ஃபிளின், டுவைன் ஜான்சன் உள்ளிட்ட நான்கு பேர் தயாரிக்கும் இப்படத்தை ஜாம் கோலெட்-செர்ரா இயக்குகிறார். கடந்த ஆண்டு இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதோடு ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

 

இந்நிலையில் 'ப்ளாக் ஆடம்' படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியாகி யூ-ட்யூப் ட்ரெண்டிங் லிஸ்டில் இடம்பிடித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.