உலகளவில் வரவேற்பை பெற்ற ஜூராசிக் படத்தைக் கொண்டு நிறைய படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் தற்போது ‘ ஜுராசிக் வேர்ல்ட்: ரீபர்த்’ என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகியுள்ளது. பாஃப்டா வின்னர் கரேத் எட்வர்ட்ஸ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் அட்வென்ச்சர் படத்தில் அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்றும் ஆலிவர் விருது வென்ற ஜொனாதன் பெய்லி, மஹெர்ஷாலா அலி மற்றும் லூனா பிளேஸ் மற்றும் ரூபர்ட் ஃப்ரெண்ட் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. 2 நிமிடம் 25 வினாடிகள் ட்ரைலரில் பல ஆக்ஷன் சாகசங்களும் திருப்பங்களுடன் கூடிய அறிவியல் கதையும் நிறைந்துள்ளது. இப்படம் ஜூலை 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.