Advertisment

முடிவுக்கு வரும் 'ஜுராசிக் வேர்ல்ட்'; கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்

Jurassic World Dominion Booking started

டைனோசர்களை மையமாக வைத்து வெளிவரும் 'ஜுராசிக்வேர்ல்ட்'படவரிசையில் அடுத்தாக'ஜுராசிக் வேர்ல்ட் டொமினியன்' படம் வெளியாகவுள்ளது. பொதுவாக ஜுராசிக் வேர்ல்ட் படங்களுக்கு என்று உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள்உள்ளன.அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரின் விருப்ப படமாக இன்றளவும் இருந்து வருகிறது.

Advertisment

'ஜுராசிக்வேர்ல்ட்' பட வரிசையில் இறுதி பாகமாகவெளியாகவுள்ள இப்படம் மனிதர்களும், டைனோசர்களும் ஒன்றாக வாழ முடியாது என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில்முதன்முதலாக வெளிவந்த ‘ஜுராசிக் பார்க்’ படத்தில் நடித்த சாம் நீல், ஜெஃப் கோல்ட்பிளம், லாரா டெர்ன் ஆகியோரும் நடித்துள்ளனர். இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் ட்ரைலர்ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூன் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான முன்பதிவு இந்தியாவில் சில நகரங்களில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

hollywood
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe