/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/471_11.jpg)
ஜூனியர் என்.டி.ஆர் தற்போது தேவரா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தற்போது 'கே.ஜி.எஃப்', 'சலார்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு தற்காலிகமாக 'என்டிஆர்நீல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதி முதல் தொடங்கவுள்ளது. இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. என்டிஆர் மற்றும் இயக்குநர் நீல் தங்களது குடும்பத்தினருடன் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர்.
புவன் கவுடா ஒளிப்பதிவு செய்கிறார். ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இந்தப் படம் சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)