Junior NTR meets Amit Shah

Advertisment

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், 'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றிக்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்பட்ட ஹீரோவாக மாறியுள்ளார். இவர்ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் தெலுங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகோபால் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக தெலுங்கானா சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐதராபாத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் சந்திப்பு மேற்கொண்டார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் 'ஆர்.ஆர்.ஆர்' படம் குறித்து பேசியுள்ளனர். அதோடு அமித்ஷா அழைப்பு விடுத்திருந்த உபசரிப்பு விருந்திலும் கலந்து கொண்டுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர். - அமித்ஷாவின்இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.