Advertisment

“எனக்கு அவர் யார் என தெரியாது”- நடிகையிடம் கொந்தளித்த ரசிகர்கள்!

meera

Advertisment

பாலிவுட் படமான செக்‌ஷன் 375 படத்தின் ஹீரோயின் மீரா சோப்ரா, இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நேற்று தனது ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடி கொண்டிருந்தார். அப்போது, ஒருவர் ஜூனியர் என்.டி.ஆர் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என கேட்க, எனக்கு அவர் யார் என தெரியாது மற்றும் நான் அவருடைய ரசிகை அல்ல” என்று முடித்துவிட்டார்.

அதனை தொடர்ந்து, ‘அவருடைய படங்களை பார்த்தால் ரசிகையாக மாறிவிடுவீர்கள்’ என்று மற்றொருவர் தெரிவிக்க அதற்கு, ‘மிக்க நன்றி ஆனால் ஆர்வமாக இல்லை’ என்று வெளிப்படையாக தெரிவித்துவிட்டார்.

இதனை அடுத்து ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் மீரா சோப்ராவை திட்டி பதிவிட்டு வருகின்றனர். இதை கண்டித்து ஜூனியர் என்.டி.ஆரை டேக் செய்து, ”இதுமாதிரி ரசிகர்களை சம்பாதித்தில் என்ன வெற்றி கண்டீர்கள்? என்னுடைய பதிவிற்கு பதிலளிக்காமல் இருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். சின்மயி, பாதிக்கப்பட்ட மீரா சோப்ராவிடம், இதுபோல உங்களை மிரட்டும், கேவலப்படுத்துபவர்களின் பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ‘தேசிய பெண்கள் ஆணையம்’ த்திற்கு தெரிவியுங்கள் என்றார்.

Advertisment

இறுதியாக மீரா சோப்ரா தன்னை மிரட்டும், அசிங்கமாக பதிவிடுபவர்களின் பதிவுகளை ஒருசேர சேர்த்து ட்விட்டர் மற்றும் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இவ்வாறு செய்பவர்களின் ஐடிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.

twitter
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe