பாகுபலி 2 படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, அடுத்த பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி. உண்மையான இரண்டு சுதந்திர வீரர்களை அடிப்படையாக கொண்டு அதனுடன் புனைவு கதையை சேர்த்து உருவாகும் இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Advertisment

rrr

மேலும், பாலிவுட்டை சேர்ந்த ஆலியா பட், அஜய் தேவ்கன், தமிழ் நடிகரான சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்கின்றனர். பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவானிதான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.

nakkheeran app

Advertisment

கடந்த மாதம் ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவருடைய கதாபாத்திரம் தோற்றத்தைசிறியடீஸரில் வெளியிட்டது. ராம்சரணின் ரசிகர்கள் இதனால் குஷியாகினர். அதை ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களும் கொண்டாடினார்கள். காரணம் ஜூனியர் என்.டி.ஆர்தான்வீடியோவில் ராம்சரண் குறித்துவாய்ஸ் ஓவரில் பேசியிருப்பார்.

இதனைதொடர்ந்து மே20 ஆம் தேதி ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாள்வருவதால் அதற்குஇதுபோல வீடியோவெளியிட முடியாதுஎன்று படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது படக்குழுவினர் அனைவரும் லாக்டவுனில் இருப்பதால் அது சாத்தியமற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம்சரண் வீடியோ லாக்டவுனிற்கு முன்பே ரெடி செய்யப்பட்டு, அந்நேரத்தில் வீட்டிலிருந்து டப்பிங்தான் பேசினோம் என்றும் தெரிவித்திருப்பதால் ஜூனியர் என்.டி.ஆர்ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.