சுறா சவாரி செய்யும் ஜூனியர் என்.டி.ஆர்

junior ntr devaraa trailer released

ஆர்.ஆர்.ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள திரைப்படம் ‘தேவரா’. சுதாகர் மிக்கிலினேனி மற்றும் கோசராஜு ஹரிகிருஷ்ணா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை கொரட்டலா சிவா இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் கதாநாயாகியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார். இப்படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அவர் அறிமுகமாகிறார். இப்படம் தெலுங்கில் படமாக்கப்பட்டு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படத்திலுருந்து இதுவரை ‘ஃபியர் சாங்...’ (fear song) மற்றும் ‘தாவூதி...’ ஆகிய வீடியோ பாடல்களும், ‘பத்தவைக்கும்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதில் ‘பத்தவைக்கும்...’ பிரபல சிங்களப் பாடலான 'மணிகே மகே ஹிதே' பாடலின் சாயலாக இருக்கிறதென விமர்சனம் எழுந்தது. இதையடுத்து அந்த பாடலின் இசையமைப்பாளர் சமத் சங்கீத், “என்னுடைய பாடல் அனிருத் இசையமைக்கத் தூண்டுகோலாக அமைந்தது மகிழ்ச்சிதான்” என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பிரகாஷ் ராஜ் குரலில் தொடங்கும் இந்த ட்ரைலரில் ‘அவங்களுக்கு சாதி தெரியாது மதம் தெரியாது... பயம்ன்னா என்னன்னே தெரியாது’ என்ற வசனங்களுடன் தொடங்கி பின்பு சண்டை காட்சிகள் அதிகம் இடம் பெறுகிறது. மேலும் ‘இரத்தத்தால் கடல் முழுக்க சிவப்பான கதை... எங்கள் தேவரா கதை’ என்ற கடல் தொடர்பான பல காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு இறுதியில் சுறா மீது ஜூனியர் என்.டி.ஆர் சவாரி செய்யும் காட்சிகளுடன் ட்ரைலர் முடிகிறது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

junior ntr
இதையும் படியுங்கள்
Subscribe