Advertisment

"தனது சிறந்த நடிப்பால் அனைவரையும் மகிழ்வித்தவர் அவர்!" - ஜூனியர் என்.டி.ஆர் வருத்தம்!

gewgse

தெலுங்கின் முன்னணி காமெடியனாகவும், வில்லன் நடிகராகவும் வலம் வந்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. இவர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த ஆறு படத்தில் ரெட்டி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அஜித்தின் ஆஞ்சநேயா மற்றும் தனுஷின் உத்தமபுத்திரன் படங்கள் மூலம் தமிழில் பிரபலமடைந்த நடிகர் ஜெயபிரகாஷ் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். 73 வயதான இவர் மேடை நாடகத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கியவர், பின்னர் தெலுங்கு திரையுலகில் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் பணிபுரிந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஜெயபிரகாஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"தனது சிறந்த நடிப்பால் அனைவரையும் மகிழ்வித்த ஜெயபிரகாஷ் ரெட்டி இனி வரப்போவது இல்லை என்ற என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைத்தேன். அவரது ஆத்மாவுக்கு அமைதி கிடைக்க விரும்புகிறேன். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும் ஜெயபிரகாஷ் ரெட்டி காரு" என கூறியுள்ளார்.

Advertisment

junior ntr
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe