Skip to main content

விஜயை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியும்.....

Published on 24/03/2018 | Edited on 26/03/2018
vijaysethupathi


கடந்த 16ஆம் தேதி முதல் சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்ட நிலையில் ஏற்கனவே நடைபெற்ற விஜய் படம் உள்பட 4 படங்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்றன. இதன் காரணமாக திரையுலகில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் இதற்கான விளக்கத்தை தயாரிப்பாளர் சங்க செயலாளர் துரைராஜ் கடந்த 20ஆம் தேதி தெரிவித்தார். இந்நிலையில் நேற்று (23ஆம் தேதி) முதல் வெளியூர், வெளிநாட்டு படப்பிடிப்புகளும் நிறுத்தப்படும் என்று ஏற்கனவே தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பல படங்களின் வெளிநாட்டு படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் 'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் சேதுபதி, சாயிஷா, இயக்குனர் கோகுல் உள்ளிட்ட படக்குழுவினர் போர்ச்சுக்கல் நாட்டுக்கு சென்று இருக்கிறார்கள். அங்கு தொடர்ந்து 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து வேலை நிறுத்தம் நடைபெறும் நேரத்தில் 'ஜுங்கா' படக்குழுவினர் படப்பிடிப்புக்காக போர்ச்சுக்கல் சென்று இருப்பதும் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து இதற்கு விளக்கமளித்த படக்குழு, ஏற்கனவே  குறிப்பிட்ட தேதியில் போர்ச்சுக்கல் செல்ல விமான டிக்கெட், படப்பிடிப்பு அனுமதி ஆகியவை பெறப்பட்டு இருப்பதால் படக்குழு போர்ச்சுகல் நாட்டிற்கு புறப்பட்டு சென்று இருப்பதாக அறிவித்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜுங்கா லேட்டஸ்ட் படங்கள்

Next Story

'அவர் ஒரு 'கருப்பு தங்கம்' - மூத்த நடிகரைப் புகழ்ந்த விஜய் சேதுபதி!

Published on 13/07/2018 | Edited on 13/07/2018
vijay sethupathi

 

நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் அவர்களின் பிறந்த நாள் விழாவும், 'ஜூங்கா' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பும் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் அருண் பாண்டியன், விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டின், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் ‘ஜுங்கா’ படம் வரும் 27 ஆம் தேதியன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி 'ஜூங்கா' படக்குழுவினர் குறித்து பேசுகையில்..... "இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இது தான் 'ஜுங்கா'வில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான முதல் காரணம். 

 

 

அதன் பிறகு தான் அருண் பாண்டியன் வந்தார். அவரை ஒரு ‘கருப்பு தங்கம் ’ என்று சொல்லலாம். அவருக்கும் எனக்கும் இடையே எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லை. படத்தின் கதையை கேட்காமல் தயாரிக்க முன்வந்தார். வாங்கவும் முன்வந்தார்.இது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இது அவரின் அனுபவ வெளிப்பாடு என்று நினைக்கிறேன். ‘உங்களுடைய கதை தேர்வு நன்றாக இருக்கிறது. அதனால் நீங்கள் நடிக்கும் படத்தை தயாரிக்க முன்வந்தேன்.’ என்று என்னிடம் முதல் முறை சந்திப்பின் போது சொன்னார். ஆஸ்திரியாவில் படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது இயக்குநரிடம் தொலைபேசி மூலம் கதையின் ஒன் லைன் என்ன என்று கேட்டார். அதன் பிறகு படத்திற்கு பட்ஜெட் போடுவதாகட்டும், லொகேஷன் தேடுவதாகட்டும் எதிலும் தலையிடவில்லை. தணிக்கைக்கு அனுப்பும் போது தயாரிப்பாளர் என்ற முறையில் படத்தை ஒரு முறை பார்க்கவேண்டும் என்ற காரணத்தால் படத்தை ஒரு முறை பார்த்தார். நான் கோகுல் மீது நம்பிக்கை வைப்பதும், கோகுல் என் மீது நம்பிக்கை வைப்பதும் சாதாரணமானது. இயல்பானது. ஆனால் எங்களை நம்பி அருண் பாண்டியன் வந்தார். அது தான் ஆச்சரியமான விஷயம். இன்றைக்கு சந்தோஷமான விஷயமும் கூட.

 

vijay sethupathi

 

சரண்யா பொன்வண்ணன் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட். ‘தென்மேற்கு பருவகாற்று ’ படத்தில் அவர் நடிக்கும் காட்சியின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் காட்டும் அக்கறை என்னை வியக்க வைத்தது. அவரின் பொதுநலத்துடன் கூடிய இந்த சிந்தனை என்னை ஈர்த்தது. இந்த படத்தில் அவர் வடசென்னை ஸ்லாங் பேசுவதில் காட்டிய முயற்சி அவர் இந்த கலையை எவ்வளவு தூரம் உண்மையாக நேசிக்கிறார் என்பதை எனக்கு உணர்த்தியது. ஒரு காட்சியை இயக்குநரின் கற்பனை கலந்த எதிர்பார்ப்பிற்கு ஏற்ப செய்திடவேண்டும் என்ற அவர்களின் தவிப்பை நான் இந்த படத்தின் மூலம் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன். சரண்யா மேடத்துடன் மீண்டும் நடிக்க கிடைத்த வாய்ப்பை வரமாக கருதுகிறேன்.

 

 

மடோனாவிற்கும் என் மீதும் பெரிய நம்பிக்கை. இயக்குநர் அந்த கேரக்டருக்கு மடோனா பொருத்தமாக இருப்பார் என்று எண்ணியவுடன், அவரைத் தொடர்பு கதையை கேட்குமாறு சொன்னேன். அவரும் கதையைக் கேட்டார். என்னைப் பொறுத்தவரை நான் சந்தித்த ஆகச்சிறந்த நடிகை மடோனா என்பேன். இதற்கு முன் நான் நடிகை காயத்ரியை அப்படி பல முறை சொல்லியிருக்கிறேன். அதற்கடுத்து நடிகை மடோனாவை சொல்வேன். நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் பெரிய திறமைசாலி. யோகி பாபுவுடன் ஆண்டவன் கட்டளைக்கு பிறகு நாங்கள் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம். படபிடிப்பு தளத்தில் அந்த கேரக்டருக்கு, அந்த தருணத்தில் என்ன பஞ்ச் பேச முடியுமோ அதை பேசி அசத்துவார். இந்த படத்தை நாங்கள் ரசித்து ரசித்து செய்திருக்கிறோம் உங்களின் சுவைக்காக இம்மாதம் 27 ஆம் தேதியன்று சமர்பிக்கிறோம்"என்றார்.