Advertisment

படப்பிடிப்பில் மயக்கம்... சாயீஷாவின் அர்ப்பணிப்பு... நெகிழ்ந்த இயக்குனர் 

sayyesha

விஜய் சேதுபதி புரொடக்சன் மற்றும் ஏ & பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன், விஜய் சேதுபதி இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் 'ஜுங்கா' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விஜய் சேதுபதி, சாயீஷா இணைந்து நடித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அப்போது விழாவில் கலந்துகொண்ட இப்படத்தின் இயக்குனர் கோகுல் பேசிம்போது.... "இது பாலகுமாரா படத்தின் இரண்டாம் பாகமா? என கேட்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும். நான் ஏற்கனவே செய்த படத்தை மீண்டும் இயக்குவதில்லை. இது பாலகுமாரா இரண்டாம் பாகமல்ல. அதற்கும் மேல். இந்த படத்தில் பிரம்மாண்டமாக காமெடி இருக்கிறது. ஆக்சனும் பிரம்மாண்டமாக இருக்கும். பாலகுமாரா யூத் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டது. ஆனால் இந்த 'ஜுங்கா' ஆல் ஆடியன்சுக்காக எடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

sayyesha

இந்த படத்தில் ஒரு காட்சியில் நடிக்கும் போது சயீஷா அளித்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. மைனஸ் 9 டிகிரி குளிரில் காட்சிகள் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, குளிர் தாங்க முடியாமல் சாயீஷா மயங்கி கீழே விழுந்தார். அவரது உதடுகள் நீலநிறமாக மாறியது. அவரது அம்மா பதறினார். நாங்களும் உடனே மருத்துவ உதவிக்காக அவரை காரில் அனுப்பி வைத்தோம். ஆனால் அந்த கார் சிறிது தூரம் சென்ற பின்னர் திரும்பவும் படபிடிப்பு தளத்திற்கே வந்தது. இன்னும் சில ஷாட்கள் தான் மீதமிருக்கிறது. அதை நடித்து விட்டு மருத்துவ உதவியைப் பெற்றுக் கொள்கிறேன் என்றார். இதை என்னால் மறக்க முடியாது. இதுபோல் ஒரு பொறுப்புள்ள நடிகையை என் வாழ்நாளில் பார்த்ததில்லை" என்றார்.

Advertisment

sayyessa junga vijaysethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe