Skip to main content

பப்ஜி விளையாட்டில் பங்குபெறும் பிக்பாஸ் ஜூலி, ஐஸ்வர்யா தத்தா 

Published on 19/08/2019 | Edited on 19/08/2019
julie aishwarya

 

 


பிக்பாஸ் 1வது சீசன் மூலம் பிரபலமடைந்த ஜூலியும், பிக்பாஸ் 2வது சீசன் மூலம் பிரபலமடைந்த ஐஸ்வர்யா தத்தாவும் ஒரு ஆக்ஷன் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர். பப்ஜி விளையாட்டை மையமாக வைத்து 'பொல்லாத உலகின் பயங்கர கேம்' பப்ஜி' என பெயரிப்பட்டுள்ள இப்படத்தை தாதா 87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கவுள்ளார். ஐஸ்வர்யா தாத்தா தற்போது அலேக்கா, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவண்டா படங்களிலும், ஜூலி தற்போது அம்மன் தாயீ படத்திலும் நடித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா-வின் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
mahat raghavendra movie update

வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபுராம். செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா தத்தா நடித்திருக்கும் படம் 'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா'. ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் சாக்ஷி அகர்வால், யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்திற்கு தரண் குமார் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் கிருஷ்ணன் பின்னணி இசையை கவனித்துள்ளர். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்தப் படத்தின் ஆடியோ மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். 
 

Next Story

அந்தப் படத்துக்காக 13 கிலோ எடை குறைத்த பிக்பாஸ் நடிகை!

Published on 13/02/2021 | Edited on 13/02/2021

 

hhfrbhf

 

கதாபாத்திரத்திற்காக நடிகர்கள் உடல் எடையைக் குறைப்பதையும், கூட்டுவதையும் நாம் வாடிக்கையாகப் பார்த்துவரும் இந்தச் சூழலில், நடிகை ஐஸ்வர்யா தத்தா தான் நடிக்கும் ‘SSHHH’ ஆந்தாலஜி படத்தின் கதாபாத்திரத்திற்காக 13 கிலோ எடை குறைத்துள்ளார். பிக்பாஸ் 2 மூலம் புகழடைந்த ஐஸ்வர்யா தத்தா, தற்போது தமிழில் நாயகியாக 7 படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் வின்னர் ஆரி நடிக்கும் ‘அலேகா’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’, ‘கூடவன்’, ‘கன்னி தீவு’, ‘கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா’, பாலாஜி மோகன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படம் மற்றும் ‘மிளிர்’ முதலான படங்களில் நடித்து வருகிறார்.