Advertisment

'இருட்டு' படத்தால் என் படம் கரைந்து விடும் - பிரபல தயாரிப்பாளர் புலம்பல் 

jsk

ஸ்ரேயா ரெட்டியின் நடிப்பில் வரும் ஜூன் 29 ஆம் தேதி வெளிவரும் 'அண்டாவ காணோம்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை பற்றி பேசும்போது...

Advertisment

"அண்டாவ காணோம், நியாயமான முறையில் தணிக்கை செய்யப்பட்டு, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்க கூடிய நேர்மையான நகைச்சுவை படம். குழந்தைகள் விடுமுறை காலத்தில் பார்க்க விரும்பும் படங்களை தயாரிப்பது என்பது ஒரு சமூக அக்கறை. சமீபமாக வெகு குறைந்த அளவில் உள்ள ஒரு சாராரை கவரும் படங்கள் வருவது வருத்ததுக்கு உரியது. இந்த சமூகத்துக்கு நான் செய்யும் சேவை நல்ல தரமான படங்கள் தருவதுதான். அதன்படியேதான் பணியாற்றி வருகிறேன்.

Advertisment

என் தயாரிப்பில், அடுத்த மாதம் 29 ஆம் தேதி வெளி வர இருக்கும் ‘அண்டாவ காணோம்’ என் கூற்றை நிரூபிக்கும். மேலும் இருட்டு அறையில், இருட்டு மனங்களுக்காக, இருட்டு குணங்களால் தயாரிக்கப்படும் படங்கள், 'அண்டாவ காணோம்' போன்ற தரமான படங்களை இருட்டில் கரைத்து விடும்" என்றார் ஜே எஸ் கே.

iruttuaraiyilmurattukuththu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe