ஆஸ்கர் குழுவில் ஜூனியர் என்.டி.ஆர்

jr NTR On Oscars' Academy List Of New Member Class Of Actors

'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30வது படமான தேவாரா படத்தில் நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷனுடன் 'வார் 2'-வில் நடிக்கிறார்.

இந்த நிலையில்ஆஸ்கர் விருதை சார்ந்த அகாடமி ஆப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற அமைப்பு புதிய உறுப்பினர்களான நடிகர்கள் பட்டியலை வெளியிட்டது. மொத்தம் 5 பேர் கொண்ட நடிகர்களில் ஜூனியர் என்.டி.ஆரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதற்காக அவருக்கு திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்கர் விருதில்அவர் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்' படம் சிறந்த பாடல் என்ற பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடலுக்காக விருது வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Jr NTR oscar awards
இதையும் படியுங்கள்
Subscribe