Advertisment

'இப்படியுமா இருப்பாங்க' - வியக்க வைத்த ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்

Jr Ntr fan builds house using bricks with actor's name engraved

'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30வது படமான தேவாரா படத்தில் நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். சைஃப் அலிகான் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷனுடன் 'வார் 2'-வில் நடிக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர், செங்கல்லில் என்.டி.ஆரின் பெயரை பொறித்து வீடு கட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் இந்த செயல் பலரது கவனத்தை பெற்றுள்ளது. ஆந்திராவில் கர்னூல் பகுதியை சேர்ந்த அந்த ரசிகர் ஒரு வீடு கட்டி வருகிறார். அவர் தீவிர ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர் என்றும், அவரது வீடு கட்டி வரும் செங்கல்லில் என்.டி.ஆர் என பொறிக்க சொல்லியுள்ளாராம்.

Advertisment

அதன்படி செங்கல்லில் என்.டி.ஆர் என்ற எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பதிவின் கீழ் 'இப்படியுமா இருப்பாங்க...' என பலரும் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஜூனியர் என்.டி.ஆரின் மீது கொண்ட பற்றினாலும், அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது.அந்த ரசிகரின் இந்த வித்தியாசமான செயல் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Jr NTR
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe