/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/156_16.jpg)
'ஆர்.ஆர்.ஆர்' பட வெற்றியால் இந்திய அளவில் பிரபலமான ஜூனியர் என்.டி.ஆர், தற்போது அவரது 30வது படத்தில் நடிக்கிறார். கொரட்டாலா சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தை அடுத்து கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் பாலிவுட் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில்அயன் முகர்ஜி இயக்கத்தில் ஹிரித்திக் ரோஷன் நடிக்கும் வார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் நிலையில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில் முதல் முறையாக பாலிவுட்டில் தடம் பதிக்கவுள்ளார் ஜூனியர் என்.டி.ஆர்.
சமீப காலமாக தென்னிந்திய படங்களான'புஷ்பா', 'கே.ஜி.எஃப் 2', 'ஆர்.ஆர்.ஆர்' உள்ளிட்ட படங்கள் பாலிவுட்டில் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தன. மேலும், பாலிவுட்டில் தடம் பதித்த தென்னிந்திய பிரபலங்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா வரிசையில் ஜூனியர் என்.டி.ஆரும் இணையவுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)