Advertisment

'பயணம் நிறைவடைந்தது பிரியாவிடை பெறுகிறேன்' - சூரி ட்வீட்

'The journey is over and goodbye' - Soori tweet

'கற்றது தமிழ்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராம். அடுத்து இவர் இயக்கிய 'தங்கமீன்கள்' படம் 61-வது தேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. அதனை தொடர்ந்து 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கினார். இவர் அடுத்ததாக மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அஞ்சலி நடிக்கிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Advertisment

இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவுபெற்றுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது குறித்தான புகைப்படங்களை சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், "ஒரு மனிதனின் வாழ்க்கையில் தனது ரயில் பயணம் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும். அதேபோல் இந்த படத்திற்கான எங்களுடைய ரயில் பயணம் நேற்றோடு நிறைவடைந்தது. பிரியாவிடை பெறுகிறேன்... " என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Advertisment

Anjali actor soori director ram
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe