தம்பி படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிக்கும் படம் பொன்மகள் வந்தாள். புதுமுக இயக்குநர் ஜே.ஜே. பிரிட்டோ இயக்கத்தில் சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

Advertisment

jo

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிக்கப்பட்டு இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அண்மையில் படக்குழு வெளியிட்டது. அதில் இப்படம் மார்ச் 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாளை இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருந்தது. கரோனா வைரஸ் அச்சத்தால் அந்த நிகழ்ச்சியைப் படக்குழு ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக விழா இன்றி சமூக வலைத்தளங்களில் நேரடியாக இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்படும் என்று அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

Advertisment

இப்படத்தில் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் ஜோதிகாவுடன் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற, ரூபன் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.