/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/183_26.jpg)
தமிழ், இந்தி, பஞ்சாபி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பாடி வருபவர் பின்னணி பாடகி ஜொனிதா காந்தி. தமிழில் பல பாடல்கள் பாடியிருந்தாலும் இவர் பாடிய ‘செல்லம்மா...’(டாக்டர்), ‘அரபிக் குத்து...’(பீஸ்ட்) உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்றது மட்டுமல்லாமல் இவரையும் பிரபலமாக்கியது. கடைசியாக தமிழில் இவர் பாடிய ‘யேடி...’(நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்) பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படங்கள் அல்லாது பல்வேறு ஆல்பம் பாடல்களிலும் இசைக் கச்சேரிகளிலும் பாடியுள்ளார். இவர் செல்லியில் பஞ்சாபி குடும்பத்திற்கு பிறந்தவர். பின்பு கனடாவில் செட்டிலாகிவிட்டார்.
இந்த நிலையில் ஜொனிதா காந்தி, இன்ஸ்டாகிராமில் தனக்கு வரும் மெசேஜ்கள் குறித்தும் ஆரம்பக்காலக்கட்டத்தில் தான் சந்தித்த அவமானங்கள் குறித்தும் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “சில விஷயங்கள் அதிர்ச்சிகரமானவையாக இருக்கும். அப்படி ஒரு சம்பவம் இன்ஸ்டாகிராமில் எனக்கு நடந்தது. நெருங்கிய நண்பர் ஒருவரின் ஸ்டோரியில் நான் மென்சன் செய்யப்பட்டிருந்தேன். அதை பார்த்த போது, ஒரு மோசமான புகைப்படம் இடம்பெற்றிருந்தது. மேலும் அது சம்பந்தமான ஒரு வாட்டர் மார்க்கும் பேக்ரவுண்டில் என்னுடைய போட்டோவும் இருந்தது. இது மாதிரி விஷயம் இப்போது புதிது. அது அருவருப்பானதும் துன்புறுத்தலும் கூட. அதனால் அந்த மாதிரியான விஷயங்களை நான் அவாய்ட் பன்றேன்.
நான் எனக்கு வரும் பெர்சனல் மெசேஜை செக் பண்ண மாட்டேன். முக்கியமானதை மட்டும் பார்ப்பேன். அதனால் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்களுக்கு ஒரு கவன ஈர்ப்பு வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். மேலும் அவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், அவர்களில் பலரை நான் பிளாக் செய்துவிடுவேன்” என்றார். தொடர்ந்து கனடாவில் அவர் வளர்ந்த போது எதிர்கொண்ட சவால்கள் குறித்து பேசுகையில், “நான் வளரும் போது எனது முடியைப் பற்றி நிறைய இனவெறி கருத்துக்களை எதிர்கொண்டேன். அவர்கள் என்னை காட்ஜில்லா என்று அழைத்தார்கள். குறிப்பாக என் கிளாஸில் இருக்கும் பஞ்சாபி மாணவர்கள் அப்படி சொல்லி கிண்டல் செய்தார்கள். உடல்ரீதியான அவமானங்களை இப்போதும் நான் சில சமயங்களில் எதிர்கொள்கிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)