Joju George robbed of Rs 15 lakhs in London

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் ஜோஜு ஜார்ஜ். பிரபல மலையாள நடிகரான இவர் 'ஜகமே தந்திரம்' அடுத்து 'புத்தம் புது காலை விடியாதா' மற்றும் 'பஃபூன்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

Advertisment

இப்போது இவர் நடிப்பில் மலையாளத்தில் உருவாகி வரும் 'அண்டோனி'. இதில் கல்யாணி பிரியதர்ஷன், செம்பன் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக ஜோஜு ஜார்ஜ், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட படக்குழு லண்டன் சென்றுள்ளனர்.

Advertisment

அங்கு படக்குழு ஷாப்பிங் சென்றுள்ள நிலையில் ஜோஜு ஜார்ஜிடம் இந்திய பணமதிப்பின்படி ரூ.15 லட்சம் திருடு போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பைசெஸ்டர் வில்லேஜுக்கு (Bicester Village)ஷாப்பிங் என்ற இடத்தில் நடந்துள்ளது. அந்த இடத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் தயாரிப்பாளர் காரில் ஷாப்பிங் சென்றுள்ளனர். அதனால் காரை பார்க்கிங் செய்து விட்டு கடைக்கு சென்றுள்ளனர். காரில் பாஸ்போர்ட், பணம் உள்ளிட்டவைகள் இருந்துள்ளது.

ஷாப்பிங் முடித்துவிட்டு காரை வந்து பார்க்கையில் பாஸ்போர்ட் காணாமல் போயுள்ளது. மேலும் பணமும் திருடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு இந்திய தூதரகம் தற்காலிக பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து தர அதன் மூலம் அவர்கள் இந்தியா வந்துள்ளனர்.

Advertisment