Johnny Depp WINS defamation case against Amber Heard

ஜானி டெப்(50) 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' படங்களில் கேப்டன் ஜாக் ஸ்பேரோ கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் ஏராளமான ரசிகர்களைவைத்துள்ளவர்.கடந்த 1983 ஆம் ஆண்டு லோரி அனிஅலிசன் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர் இரண்டு ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு நீண்ட வருடங்களாக தனியாக வாழ்ந்த ஜானி டெப் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னை விட 25 வயது குறைவான அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட்டைகாதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் 15 மாதங்கள்கழித்து ஜானி டெப் மற்றும் ஆம்பர் ஹேர்ட்இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்தனர்.

Advertisment

இதையடுத்து ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து கட்டுரை எழுதியிருந்தார். இதில் மறைமுகமாக தனது முன்னாள் கணவர் ஜானி டெப் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர்என்று குறிப்பிட்டிருந்தார். இந்த கட்டுரை வெளியாகி உலகம் முழுவதும்பேசு பொருளானதோடு, ஜானி டெப்பின் சினிமா மார்க்கெட்டும்சரியத் தொடங்கியது.

Advertisment

இதனைத் தொடர்ந்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் செயல்படுவதாக கூறி நடிகர் ஜானி டெப் மானநஷ்ட ஈடுவழக்கு தொடர்ந்தார். வெர்ஜினியாநீதிமன்றத்தில் மூன்றாண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் ஜானி டெப்பிற்குஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஜானி டெப்பிற்குஎதிராக ஆம்பர் கூறிய பாலியல் குற்றசாட்டுகள் போலியானது என நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் இவ்வழக்கில் இழப்பீடாக ஆம்பர் ரூ.116 கோடி (15 மில்லியன்) செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜானி டெப்பிற்குஆதரவாக தீர்ப்பு வெளியானதையடுத்துஅவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.