/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jack-im.jpg)
ஹாலிவுட்நடிகர்ஜானிடெப், உலகமெங்கும் ரசிகர்களை கொண்டிருப்பவர். ஜானிடெப்என்றால் தெரியாதவர்களுக்கு கூட ஜாக்ஸ்பேரோ என்றால் தெரியும். அந்தளவிற்கு, 'பைரேட்ஸ்ஆஃப்திகரீபியன்' படத்தொடர்களில், ஜாக்ஸ்பேரோவாகநடித்திருப்பார் என்பதை விட வாழ்ந்திருப்பார் ஜானிடெப்.
தனதுமுதல் மனைவியை1985 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தஜானிடெப்,2015 ஆம் ஆண்டுஹாலிவுட்நடிகை அம்பெர்ஹெர்டைஇரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த உறவும்நீண்டநாள் நீடிக்கவில்லை. இரண்டே வருடங்களில், ஜானிடெப்பும்அம்பெர்ஹெர்டும்விவாகரத்து செய்து பிரிந்தனர். அதை தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட்பத்திரிகையில், அம்பெர்ஹெர்ட், தன்னைஜானிடெப்கடுமையாக தாக்கியதாக தெரிவித்திருந்தார். இதனைதொடர்ந்து 'பைரேட்ஸ்ஆஃப்திகரீபியன்' படத்திலிருந்துஜானிடெப்நீக்கப்பட்டார்.தான் அம்பெர் ஹெர்ட்டை தாக்கவில்லை எனக் கூறிய ஜானி டெப் , தன்னை பற்றி பொய்யான புகாரால் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்திலிருந்து நீக்கப்பட்டேன்எனவே தனக்கு 50 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு வேண்டும் எனக்கோரி அம்பெர் ஹெர்ட் மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், 'திசன்' என்ற பத்திரிகை, ஜானி டெப் தனதுமனைவியை தாக்கினர்எனகுற்றம்சாட்டியிருந்தது. இதனைஎதிர்த்து ஜானிடெப், லண்டன்நீதிமன்றத்தில், திசன்பத்திரிகையின் மீது நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால்நீதிமன்றம் தி சன் பத்திரிகைக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. தி சன் பத்திரிகை எழுதிய குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என தீர்ப்பளித்துள்ளது. மனைவியை துன்புறுத்தினர் என்ற குற்றச்சாட்டு உறுதியானதால், தற்போது, அவர் நடிப்பதாக இருந்த 'ஃபாண்டஸ்டிக் பீஸ்ட்ஸ்' படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். லண்டன்நீதிமன்றதீர்ப்பிற்குஎதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள ஜானிடெப்ப்பிற்கு, ஆதரவாகரசிகர்கள் #JusticeForJohnnyDepp என்ற ஹஷ்டேக்ட்ரெண்டாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)