Advertisment

குழந்தைகளை பயமுறுத்தும் 'சார்பட்டா' பட நடிகர்!

bfdndfnd

ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் வழங்கும் புதிய திரைப்படம் 'தூநேரி'. கமல் நடிப்பில் வெளியான ஆளவந்தான், தெனாலி, ரஜினி நடிப்பில் வெளியான பாபா, குசேலன், உள்ளிட்ட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் இயக்குனராக பணியாற்றிய சுனில் டிக்சன் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் சவுந்தர்யா ரஜினிகாந்த் வைத்திருக்கும் விஷுவல் எபெக்ட் ஸ்டூடியோவில் நான்கு வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். பல விளம்பர படங்களை இயக்கி இருக்கும், சுனில் டிக்சன் முதல் முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கலையரசன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கைலேஷ் குமார் மற்றும் ஆலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

Advertisment

vdsbdfsbdfs

'தூநேரி' என்பது ஊட்டி அருகில் இருக்கும் ஊரின் பெயர். இப்படத்தில் கதையின் நாயகனாக 'சார்பட்டா பரம்பரை' புகழ் டாடி ஜான் விஜய் நடித்துள்ளார். கதாநாயகனாக நிவின் கார்த்திக், கதாநாயகியாக மியா ஶ்ரீ நடித்துள்ளார். குழந்தைகளை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜான் விஜய்யின் கதாபாத்திரம் குழந்தைகளை பயமுறுத்தும் அளவிற்கு உருவாக்கப் பட்டிருக்கிறது என்று இயக்குனர் சுனில் டிக்சன் தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் 70 நாட்கள் நடைபெற்றது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் ஆகியவை விரைவில் வெளியாகவுள்ளது.

Advertisment

john vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe